தொண்டைமானாறு கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

275 0

வடமாராட்சி – தொண்டைமானாறு கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் அதிகளவிலான மீன்கள் கரையொதுங்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியமை தொடர்பில் கடற்றொழிலாளர்கள் சில காரணங்களை குறிப்பிட்டுள்ளனர்.கடல் ஏரியின் நீர்மட்டம் குறைந்து உப்பு செறிவு அதிகரித்ததன் விளைவாக இவ்வாறு மீன்கள் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தொண்டமானாறு கடல் நீரேரியின் மேலதிக பாய்ச்சல் நீர் கடலுக்கு செல்லாமல் உவர் நீர் மட்டத்தின் அளவை குறைத்து நன்னீர் ஆக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக தடுப்பு அணை அமைக்கப்பட்டுள்ளமையாலேயே இவ்வாறு உப்பின் செறிவு அதிகரிப்பதாகவும், இதன் விளைவாகவே மீன்கள் இறப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.