ஆளும் கட்சியின் பிரதி மற்றும் உதவி கொறடாக்கள் நியமனம்

215 0

பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதி கொறடாக்கள் மற்றும் உதவி கொறடாக்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் வழங்கப்பட்டன .

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம் மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகியோர் பிரதி கொறடாக்களாகவும், கோகிலா குணவர்தன, மதுர விதானகே மற்றும் ; திஸ்ஸகுட்டி ஆரச்சி ஆகியோர் உதவி கொறடாக்களாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து உரிய நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சி பிரதம கொறடாவின் செயலாளரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன மற்றும் சபை முதல்வரின் செயலாளரும் பிரதமரின் மேலதிக செயலாளருமான ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.