யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் த.சத்தியமூர்த்தி நேற்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
உயர்கல்வியின் பொருட்டு பிரித்தானியாவிற்கு சென்றிருந்த யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரான சத்தியமூர்த்தி, சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பியிருந்த நிலையில், இன்று தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை காலமும் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் நந்தகுமாரன் மீண்டும் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைகளை வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

