வீடு புகுந்து ஒருவர் சுட்டுப் படுகொலை

264 0
கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை – சில்வா மாவத்தை பகுதியில், நேற்று(27) இரவு வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குள் நுழைந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.