திகதி மற்றும் நேரம் அடிப்படையில் முன்பதிவு செய்தோருக்கு மாத்திரமே எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மீளவும் பரவி வரும் கொரோனா தொற்று அச்சுறுதலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான விசேட ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக, அவசர தேவையின் நிமித்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதானியன் தமது தகவல்களை 0706311711 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பும் பட்சத்தில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

