தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரண மாத்திரைகளை தமிழக க்யூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ;திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்படவுள்ளதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து க்யூ பிரிவு பொலிஸார் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நிறுத்திப்பட்டிருந்த பதிவெண் இல்லாமல் சந்தேகத்திற்கு இடமான முறையில் தரித்து நின்ற நாட்டு படகினை ; சோதனை செய்தனர்.
அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சுமார் 443 அட்டைகளில் 4430 வலி நிவாரண மாத்திரைகள் மீட்கப்பட்டன.
க்யூ பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் நாட்டுபடகு என்பவற்றை சுங்கத்துறை அதிகாரிகளடம் ஓப்படைத்தனர்.

