ஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் 6 பேர் சுட்டுக்கொலை

244 0

ஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவைச் சங்கத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 பேரை காணவில்லை.

ஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். செஞ்சிலுவை  சங்க உறுப்பினர்கள் 6 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு ஐஎஸ் தீவிரவாதி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சுட்டுக்கொலை செய்யப்பட்ட 6 பேரும் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடும்பனியில் சிக்கிக் கொண்டவர்களுக்கு  நிவாரணம் வழங்க சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் கடும் பனியால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியான ஜோவ்ஸ்ஜன் பகுதிக்கு  நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற செஞ்சிலுவை  சங்கத்தை சேர்ந்த துறை சார்ந்த நபர்கள் 5 பேர், 3 ஓட்டுநர்கள் என 8 பேர் சென்றனர். அதில் 6 பேர்  சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேரை காணவில்லை என்று செஞ்சிலுவை சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்த செயல் ஒரு வெறுக்கத்தக்க நடவடிக்கை என்று ஆப்கானிஸ்தான் செஞ்சிலுவை சங்கத்தின் அனைத்துலகக் குழுவின்  தலைவர் மோனிகா சனரெல்லி தெரிவித்துள்ளார். செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களான, தங்களது நண்பர்களின் கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட 6 பேரின்  உடல்களும் துர்கிஸ்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.