காலிமுகத்திடல் குழப்பம் – வெளிநாட்டு தூதுவர்கள் கவலை!

163 0

காலிமுகத்திடலில் இன்று (22) அதிகாலை முதல் நீடித்து வரும் குழப்பமான நிலை தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மற்றும் இலங்கைக்கான கனேடிய தூதுவர் ஆகியோர் கவலை வெளியிட்டனர்.

காலிமுகத்திடல் பகுதி ராணுவத்தினர் வசமானதுடன் அங்கிருக்கும் போராட்டகாரர்களின் கொட்டகைகளை இராணுவத்தினர் அகற்றிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் காலிமுகத்திடல் பகுதிக்குள் யாரும் நுழைய முடியாதபடி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குழப்பமான நிலை நீடிக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஷாரா கில்டன், காலி முகத்திடல் போராட்ட தளத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைகிறேன். அமைதியான போராட்டத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கைக்கான கனேடிய நாட்டு தூதர் மெக்கினன் டேவிட், காலி முகத்திடல் போராட்ட தளத்தில் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அதிகாரிகள் நிதானத்துடன் செயல்படுவதும் வன்முறையைத் தவிர்ப்பதும் முக்கியம் என்றும் தெரிவித்தார்.