கிளிநொச்சியில் எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள்

237 0

கிளிநொச்சியில் எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எரிபொருளானது அன்றாட தேவைகருதி பொது மக்களுக்கும், அறுவடைக்காக விவசாயிகளுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(21) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.