இலங்கை நெருக்கடி மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது – ஐநா நிபுணர்

146 0

இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு பொருட்களின் விலை அதிகரிப்பு எரிபொருள் தட்டுப்பாடு மின்சார பற்றாக்குறை பொருளாதார வீழ்ச்சி குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர் கவலை வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டு கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் விசேட நிபுணர் அட்டியா வாரிஸ் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நாட்டு மக்கள் மனித உரிமைகளை அனுபவிப்பதன் மீதும் பெரும்தாக்கத்தை செலுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மீண்டும் நாடுகளின் மீது கடன்நெருக்கடி ஏற்படுத்தியுள்ள மோசமான விளைவுகளை நாங்கள் பார்த்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் கடன்நெருக்கடிஉலக நிதி அமைப்பின் ஆழமான கட்டமைப்பு இடைவெளிகளை அம்பலப்படுத்தியுள்ளதுஇமேலும் மனிதஉரிமைகளை நடைமுறைப்படுத்துவதை பாதித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான எந்த முயற்சியினதும் அடிப்படையாக மனித உரிமைகள் காணப்படவேண்டும்சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தையின் சூழமைவும் அவ்வாறானதாக காணப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  அதிகரிக்கும் கட்டமைப்பு கடன் குறித்து ஐநா நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்இஅந்த அறிக்கையில் நாட்டின் அதிகளவு செலவீனமாக காணப்படுவது கடன் செலவீனமேஇ என தெரிவித்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வீழ்ச்சி உலகின் கவனத்தை உடனடியாக ஈர்க்கவேண்டும்மனிதாபிமான அமைப்புகள் மாத்திரமின்றி சர்வதேச நிதியமைப்புகள் தனிப்பட்ட கடன் வழங்குநர்கள் மற்றும் ஏனைய நாடுகள் இலங்கையின் உதவிக்கு முன்வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.