இலங்கை சீன முதலீடுகளில் முட்டாள்தனமான பந்தயம்கட்டியது – சிஐஏ தலைவர்

172 0

இலங்கை சீன முதலீடுகளில் முட்டாள்தனமான பந்தயம் கட்டியது என சிஐஏயின் தலைவர் பில்பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார் .

இலங்கை நெருக்கடிக்கு சீனா எவ்வளவு காரணம்?

அமெரிக்காவின் சிஐஏயின் தலைவரான பில்பேர்ன்ஸ் தென்னாசிய நாடான இலங்கை சீனாவின் முதலீடுகள் மீது முட்டாள்தனமாக பந்தயம் கட்டியதே இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அத்தியவாசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணி இல்லாததால் இலங்கை உணவு எரிபொருள் தட்டுப்பாடுகளையம்இநீண்டநேர மின்துண்டிப்பையும் அதிகரித்துவரும் பணவீக்கத்தையும் எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை தலைவர்கள் மேற்கொண்ட சீனாவின் உயர் கடன் முதலீடுகளே தென்னாசியா நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணம் என சிஐஏ தலைவர் குறிப்பிடுகின்றார். சீனாவிற்கு தன்னை முன்னிறுத்தும் வலிமையும் முதலீட்டை கவரும் திறனும் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அஸ்பென் பாதுகாப்பு மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் மிகப்பெருமளவு கடனை பெற்றுள்ள இலங்கை போன்ற நாடு குறித்து உலகநாடுகள் சிந்திக்கவேண்டும்இலங்கை தனது பொருளாதார எதிர்காலம் குறித்து முட்டாள்தனமாக பந்தயம் கட்டியுள்ளதுஇதன் காரணமாக அரசியல்ரீதியிலும் பொருளாதாரரீதியிலும் பேரழிவான விளைவுகளை அந்த நாடு சந்தித்துள்ளது என சிஐஏ தலைவர் தெரிவித்துள்ளார்.