டலஸ் அழகபெருமவை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம், வாக்களித்தோம் இருப்பினும் அவர் தோல்வியடைந்தார். ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எந்த அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கமைய செயற்படுவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
கேள்வி ;உங்களின் எதிர்வாத அரசியல் கொள்கைவாதியானவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒருவேளை நீங்களும் அவருக்கு வாக்களித்திருப்பீர்கள்,?
பதில் – இல்லை,அவ்வாறில்லை,
கேள்வி – அரசாங்கம் ஸ்தாபிப்பது எதிர்வரும் காலங்களில் எவ்வாறானதாக அமையும் ?
பதில் -அவதானத்துடன் உள்ளோம், எந்த அரசாங்கம் அமைந்தாலும் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும்.மக்களுக்காக சேவையாற்றும் அரசாங்கத்தை எதிர்பார்த்துள்ளோம்.
கேள்வி -;அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளீர்களா?
பதில் – இதுவரை அவதானம் செலுத்தவில்லை,கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கமைய செயற்படுவேன்.
கேள்வி- டலஸ் அழகபெருமவின் பெயர் பரிந்துரையை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல் பீரிஷ் உறுதிப்படுத்தினார்,இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன ?
பதில்- டலஸ் அழகபெருமவை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம்.வாக்களித்தோம்.இருப்பினும் அவர் தோல்வியடைந்தார்.ஒருவர் வெற்றிப்பெற்றால் பிறிதொருவர் தோல்வியடைவார், என்றார்

