நாட்டை மீட்க ஒரு கட்சியாலோ, தனித் தலைவராலோ முடியாது – டலஸ் அழகப்பெரும

232 0

நாட்டு மக்களின் பிரதான கோரிக்கையை பாராளுமன்றில் உள்ள பெரும்பாலானவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க ஒரு கட்சியாலோ,தனி தலைவராலோ முடியாது. சகல தரப்பினரும் நாட்டுக்காக ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சிக்கும்,ஆளும் தரப்பிற்கும் இடையில் கருத்தொற்றுமையுடன், கொள்கை ரீதியிலான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் கோரிக்கை என்ன என்பதை பாராளுமன்றில் உள்ள பெரும்பாலானோர் விளங்கிக்கொள்வதில்லை.

நாட்டுக்காக ஒன்றினையுங்கள் என மதிப்பிற்குரியவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து ஒன்றினைந்துள்ளோமே தவிர பதவி ஆசைக்காக அல்ல,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று முன்தினம் மாலை வரை ஜனாதிபதி தெரிவிற்காக போட்டியிட தீர்மானித்திருந்தார்.

எமது தரப்பினர் சார்பிலும்,நாட்டு மக்கள் சார்பிலும் எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் எதிர்பார்க்காத அர்ப்பணிப்பை செய்துள்ளார். பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க ஒரு கட்சியாலோ,தனி தலைவராலோ முடியாது.இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒன்றினைந்த தற்போதைய நெருக்கடி தீர்வு காண வேண்டும் என்றார்.