ஜவஹர் நகரில் கொளத்தூர் தொகுதிக்கான எம்எல்ஏ அலுவலகம் உள்ளது.
ஸ்டாலின் 2வது முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் எம்எல்ஏ அலுவலகம் அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார்.
அலுவலகத்தின் உள்ளே குத்துவிளக்கேற்றிய அவர், தொகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் 6 மாணவ, மாணவிகளுக்கு தலா 5 ஆயிரம் கல்வி உதவித் தொகை, 6 பெண்களுக்கு தையல் இயந்திரம் என பல்வேறு உதவிப் பொருட்களை வழங்கினார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு, வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் 2வது முறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு சட்டம் – ஒழுங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தினசரி கொலை, கொள்ளைகள், சங்கிலி பறிப்பு ஆகியவை நடைபெறுகின்றன.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை.
எனவே, குற்றங்களைத் தடுத்து சட்டம் – ஒழுங்கை காப்பாற்றும் பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

