அம்பஷானை சுட்டுக் கொன்ற மூவர் கைது

203 0

பேலியகொட மானிங் மார்க்கெட் பழ சங்கத்தின் தலைவர் சமந்த பிரதீப் குமார் என்ற அம்பஷானை சுட்டுக் கொலை செய்ய ஊக்குவித்த மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அதிகாரிகள் குழுவொன்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.

நேற்று (15) மாலை பொல்ஹேன, களனி மற்றும் பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கும்புர வத்த, கொனவல பிரதேசத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 26, 38 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், மூன்று கையடக்கத் தொலைபேசிகள், வெவ்வேறு நபர்களின் நான்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வெளிநாட்டு விமான அனுமதிப்பத்திரம் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.