போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி சேருநுவர பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த சந்தேகநபர்கள் 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

