யாழ்ப்பாணம் – மண்டைதீவு கடற்கரையில் இருந்து 46 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இவை, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட போது, கடற்படையினரைக் கண்டதும் கை விட்டுச் சென்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
இதேநேரம் குறித்த கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

