சங்கரய்யாவுக்கு இன்று 101-வது பிறந்தநாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

133 0

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் தகைசால் தமிழர் தோழர். சங்கரய்யாவுக்கு, 101-வது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன். போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.