தமிழக மக்களின் இரண்டாம் கட்ட நிவாரண உதவி பொருட்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன

118 0

கிளிநொச்சி மாவட்டத்திற்கான இந்திய மக்களின் இரண்டாம் கட்ட நிவாரண உதவி பொருட்கள் இன்று கிளிநொச்சியை வந்தடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவை கண்டாவளை மற்றும் பூனகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பகிர்ந்து அளிக்கபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகையிரத பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட குறித்த பொருட்கள் மாவட்ட செயலகத்தின் ஊடாக பூநகரி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், இந்திய அரசாங்கத்தினுடைய இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

அரிசி மற்றும் பால்மா

அதில் 35,400 கிலோகிராம் அரிசியும், 2000 கிலோகிராம் பால் மாவும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை கண்டாவளை மற்றும் பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

 

அத்துடன் நாளைய தினம் ஏனைய பிரதேச செயலகங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.