இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி ரஸ்யாவால் உருவானது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை நெருக்கடிக்கு ரஸ்யா காரணம் உக்ரைன் மீதான படையெடுப்பின் ரஸ்யா உணவுப்பொருட்களை தடை செய்ததால் உலகம் முழுவதும் நெருக்கடி உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சியோலில் இடம்பெற்ற ஆசிய தலைமைத்து மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் படையெடுப்பின் போது ரஸ்யா பயன்படுத்திய தந்திரோபாயங்களில் ஒன்று பொருளாதார அதிர்ச்சியாகும் என தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி தற்போதைய நெருக்கடி காரணமாக நாடுகள் எரிபொருள் உணவு நெருக்கடி- உணவுவிநியோக பாதிப்பை எதிர்கொள்வதன் காரணமாக நாடுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது இது ரஸ்யாவின் நிகழ்ச்சி நிரலிற்கு உதவியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது எங்களிற்கு மாத்திரம் கரிசனையளிக்கின்ற விடயமல் உதாரணத்திற்கு இலங்கையை அங்கு நடப்பவைகளை பாருங்கள் அதிர்ச்சியளிக்கும் எரிபொருள் உணவு விலை அதிகரிப்பு சமூக வெடிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது எப்படிமுடியும் என்பது எவருக்கும் தெரியாது ஆனால் இதேபோன்ற நிலை ஏனைய நாடுகளில் ஏற்படலாம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்

