யாழ்.காரைநகர் ஜே/45 கிராம சேவகர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியினை கடற்படையினரின் தேவைகளுக்கு அளவிடுவதற்கு இன்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
நில அளவை திணைக்களம் குறித்த பகுதிக்கு வருகை தந்தவேளை அங்கு ஒன்றுகூடிய அரசியல் பிரமுகர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து நில அளவை முயற்சியை முறியடித்தனர்.
இதன்போது கடற்படையினருக்கு காணி வழங்க முடியாது என தெரிவித்து நில அளவை திணைக்களத்திற்கு எழுத்து மூலமான ஆவணம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து நில அளவை திணைக்களம் அங்கிருந்து அகன்றது. மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்ற இந்த இக்கட்டான சூழ்நிலையில் நில அளவை திணைக்களத்தின் காணி அபகரிப்பு நடவடிக்கைகளானது அனைவர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்துகின்றது.


