ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக சரிவு

102 0

கர்நாடக மாநிலம் பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லு க்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை தற்போது குறைந்தது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது. ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.