பாரிய ஆலைகளை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் – சிறு ஆலை உரிமையாளர்கள்

12 0

பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியைப் பதுக்கி வைத்திருப்பதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகர்கள் அரிசிக் கையிருப்புகளை மறைத்து உள்ளூர் சந்தைக்கு வெளியிடுவதில்லை என இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் சங்கத்தின் தலைவரான யூ.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தையில் தட்டுப்பாடு இருப்பதாக வர்த்தகர் சித்திரித்ததாகவும், இதனால் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.