நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உத்தியோகபூர்வ கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இ.தொ.கா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இ.தொ.கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
பிரதேச சபைத் தலைவர் மீதான அரச காணி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது .
இதன் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் , ஆதாரங்களின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

