நாட்டுப்பற்றாளர். தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

1387 0

யேர்மனியில் சாவடைந்த தேசியச் செயற்பாட்டாளர் நாட்டுப்பற்றாளர். திரு தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு யேர்மனி லூடென்சைட் நகரத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேவாலயத்தில் திருப்பலி நிகழ்வு நிறைவடைந்ததும். தேசியச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக் கொடி சுமந்துவரப்பட்டு அன்னாரின் பூதவுடலுக்கு போர்க்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துகத் தொடர்பகத்தால் மதிப்பளிக்கப்பட்ட நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு வாசிக்கப்பட்டு குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது. பின்பு தமிழீழத் தேசியக்கொடியும் அவரின் திருவுருவப்படமும் நாட்டுப்பற்றாளர். தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்களின் மனைவியிடம் கையளிக்கப்பட்டது.