நாட்டுப்பற்றாளர். திரு தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரம்- (பரா) TCC Germany.

331 0

நாட்டுப்பற்றாளர். திரு தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரம் (பரா)

பிறப்பிடம்: இணுவில் கிழக்கு தமிழீழம்.
வதிவிடம்: லூடென்சைட் (Lüdenscheid-Germany)

மானிட வாழ்வின் அதியுன்னதமான பண்பாக கருதப்படுவது பெற்றதாயையும், பிறந்த மண்ணையும் போற்றுவதாகும். தமிழீழப் போர் காரணமாக புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்கள், தேசவிடியலை நோக்கிய பாதையில் செல்வதற்காக உருவாக்கப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னெடுப்புகளில் உணர்வுடன் பணியாற்றிய நாட்டுப்பற்றாளர். திரு தனம்ஜெயசிங்கம் பரராஜாசேகரம் அவர்களை இழந்து நிற்கின்றோம்.

நாட்டுப்பற்றாளர். திரு தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரம் அவர்கள் 1987ம் ஆண்டு தொடக்கம் சாவடையும் வரை தேசவிடுதலைச் செயற்பாட்டை தனது மூச்சாக நினைத்து செயலாற்றிய உணர்வாளராவார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் லூடென்சைட் நகரப்பொறுப்பாளராகவும், கோட்டப் பொறுப்பாளராகவும் பணியாற்றியதோடு, 2015 ம் ஆண்டு தொடக்கம் இறுதிவரை லூடென்சைட் தமிழாலய நிர்வாகியாகவும் பணிபுரிந்து, காலநேரம் பாராது மக்கள் உறவையும் பிறமாநில, நகரச் செயற்பாட்டாளர்களுடன் நல்லுறவைப் பேணியதோடு,போர் மௌனித்த பின் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழீழக் கொள்கையின் பிடி வழுவாது செயலாற்றிய பற்றாளராவார்.

அன்னாரின் இழப்பால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மனைவி,மகள்,மருமகன்,பேரப்பிள்ளைகள் ,உற்றார் ,உறவினர்கள், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை பகிர்வதோடு, அவரது ஆத்மா அமைதிபெற இயற்கையை வேண்டி, அவர் நினைவோடு எம் இலட்சியப் பயணங்களை தொடர்வோமென உறுதி கொள்கின்றோம்.

 

“தேசப் பற்றும் தேச உணர்வும் தேசப் பதிவில் ஏற்றப்படும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.