முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை : பி.சீ.ஆர். – ரெபிட் அன்டிஜன் சோதனையும் அவசியமில்லை

164 0
1303835701
Kemal Yildirim/Getty Images

நாளை முதல் நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை முதல் பி.சி.ஆர். – ரெபிட் அன்டிஜன் பரிசோதனையும் அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்த தடையும் இன்றி அதனை அணிந்து கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளுது

அத்துடன், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது பொறுத்தமானது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் கூட்டு முடிவாகும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.