லைவ் அப்டேட்ஸ்: ரஷியா உடனான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது – அதிபர் ஜெலன்ஸ்கி

178 0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 89 நாளாகிறது. உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷிய ராணுவம் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

23.5.2022
03.45: பிரெஞ்சு ஐரோப்பிய விவகாரத்துறை மந்திரி கிளெமென்ட் பியூன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நாம் நேர்மையாக இருக்க வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் அல்லது ஓரிரு ஆண்டுகளில் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரப் போகிறது என்று நீங்கள் சொன்னால், நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது என்பது இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளில் நிகழலாம் என தெரிவித்தார்.
00.30: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அங்கு ஒரு டிவி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைன் போரில் ரத்தக்களறி ஏற்படுகிறது. தாக்குதல் தொடர்கிறது. போர் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையேயான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தை மூலம்தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
போர்க்களத்தில் உக்ரைன் வெற்றி பெற்றாலும், பேச்சுவார்த்தைக்குப் பின்னரே போர் செயல்பாடுகள் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.