கராச்சி பல்கலைக்கழக குண்டுவெடிப்பில் பலியான சீனர்கள் – குற்றவாளிகளை கைதுசெய்ய சீனா வலியுறுத்தல்

137 0

கராச்சி பல்கலைக்கழக குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.

பாகிஸ்தானின் கடந்த மாதம் இறுதியில் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உள்ளூர் மாணவர்களுக்கு சீன மொழியைக் கற்பிக்கும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே வேனில் குண்டு வெடித்தது விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், கராச்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சீனர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சீன மந்திரி பாங் சான்யு, பாகிஸ்தானின் உள்துறை மந்திரி சனாயுல்லாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஏற்கனவே, இந்த குண்டு வெடிப்பில் சீன குடிமக்களை ரத்தம் செய்த வைத்தவர்கள் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என சீன அரசு எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.