உக்ரைன்-ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதத்துக்கு மேலாக போர் நடந்துவருகிறது. ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
10.5.2022
09.57: ரஷியா உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் உற்பத்தி செய்யப்பட்ட 2.5 கோடி டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதாக ஐ.நா உணவு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் உலக அளவில் உணவு பற்றாக்குறை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைனில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்களை வெளியே எடுத்து செல்ல முடியாதபடி ரஷிய கப்பல்கள் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளன. இதையடுத்து உலக நாடுகள் தலையிட்டு ரஷிய தடுப்புகளை நீக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

