விபத்தில் மூவர் மரணம்

176 0

பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் மனம்பிட்டிய கோட்டலிய பாலத்துக்கு அருகில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பஸ்ஸொன்றும் ஓட்டோவொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டோவில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர் என மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த மூவரும் அரலகங்வில- அருணபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

விபத்தையடுத்து, தனியார் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விபத்துக்குள்ளான ஓட்டோ மற்றுமொரு பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது, முன்னால் வந்த தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.