கோட்டா கோ கம! மைனா கோ கம!

278 0

போரில் வெற்றி பெற்ற பின்னர் சிலர் உங்களை நாட்டை ஒன்றிணைத்த துட்டகைமுனு மன்னனுக்கு ஒப்பிட்டனர்.

கடவுளாக மதித்தனர். நீங்கள் அப்போதே ஓய்வு பெற்றிருந்தால், அந்த மன்னர் நிலையை தக்கவைத்திருந்திருக்கலாம்.

ஆனால் இன்று பொதுமக்கள் கேட்கும்போது காத்திருப்பதை விட செல்வதே நல்லது.

இந்த வசனங்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்காக இன்றைய நாளிதழ் ஒன்று பிரசுரித்துள்ள கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையால் மஹிந்த மாமாவின் மெதமுலன்ன வீட்டில், குடும்பத்தினர் அனைவரும் பாற்சோறு உண்டு மகிழ்வதை கூட காணமுடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

காலிமுகத்திடலில் தம்பியான கோட்டா மாமாவுக்கு கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளபோது, மூத்த சகோதரனாகிய உங்களுக்கு ஒரு கிராமம் அவசியம்தானே? அதனால் உங்களுக்கும் அலரிமாளிகைக்கு முன்னால்; மைனா கோ ஹோம் அமைக்கப்பட்டுள்ளது.

இது இன்னும் மேம்படுத்தப்பட்டு சமல் கோகம, நாமல் கோ கம மற்றும் பசில் கோ கம என்ற கிராமங்களும் அமைக்கப்படலாம்.

அவற்றை சுற்றுலாத் தளங்களாக மேம்படுத்தலாம். பசில் கோ கம மட்டக்குளியில் உள்ள காக்கைத் தீவில் அமைக்கப்படலாம்.

அதை கபுட கோ கம என்று பெயரிடலாம் என்றும் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அதனை பற்றி கவலைப்படாத நீங்கள், அந்த கிராமத்;தில் இருந்து வரும் சத்தத்தை குழப்புவதற்காக பிரித் பாராயனத்தை ஒலிபெருக்கி மூலம் புத்திசாலித்தனமாக ஒலிபரப்புகிறீர்கள்.

இந்தநிலையில் நீங்கள் விலகிய பின்னர், இடைக்கால அரசாங்கம் ஒன்றுக்கு தயாராகுமாறு கோட்டா மாமா கட்சி தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

எனினும் நீங்கள் சளைக்காமல் பெரும்பான்மை உங்களுக்கே இருப்பதாகவும் நானே இடைக்கால அரசாங்கத்திலும் பிரதமர் என்று கூறுகிறீர்கள்.

விமலும் உதயவும் அமைச்சரவையில் இருந்தபோது, பசில் மாமாவை விமர்சித்து அவரை அசிங்கமான அமெரிக்கன் என்று கூறியபோது அவர்களை வெளியேற்ற கோட்டா மாமா விரும்பினார் ஆனால் அவர்களை அமைச்சரவையில் தக்கவைக்குமாறு கோட்டா மாமாவிடம் கேட்டது நீங்கள்தான்.

கடைசியில், தண்ணீரை விட ரத்தம் முக்கியம் என்பதால்,கோட்டா மாமா, பாசில் மாமாவை வைத்து, இரண்டு அயோக்கியர்களையும் பதவி நீக்கம் செய்து விட்டார்.

இப்போது அவர்களே, உங்களை விலக்கக் கோரி, கோட்டா மாமாவிடம் கேட்கிறார்கள்.

போரில் வெற்றி பெற்ற பின்னர் சிலர் உங்களை நாட்டை ஒன்றிணைத்த துட்டகைமுனு மன்னனுக்கு ஒப்பிட்டனர்.

மற்றவர்கள் உங்களை கடவுளாக நடத்தினார்கள்.

நீங்கள் ஓய்வு பெற்று அந்த நிலையை என்றென்றும் அனுபவித்திருக்கலாம். சில சமயம் மகிந்த மாமா, ஏன் போகிறீர்கள் என்று மக்கள் கேட்கும் போது காத்திருப்பதை விட செல்வது நல்லது என்று செய்தித்தாளின் கட்டுரை வலியுறுத்துகிறது.

இதேவேளை அரியணைக்கு வாரிசாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நாமல் இன்று சஜித் பிரேமதாசவை போன்று போன்று ஆகிவிட்டார். எனவே அவரின் எதிர்கால அரசியல் பாரிய பொறுப்பாகவே இருக்கும் என்றும் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.