வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நடாத்தத் திட்டம்

500 0

1458306475-7236 (1)உள்ளூராட்சித் தேர்தல்களைக் கட்டம்கட்டமாக நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள தாகத் தெரியவருகின்றது.

இதனடிப்படையில், முதற்கட்டமாக எல்லைநிர்ணயம் செய்யப்பட்ட பிரதேசங்களில் தேர்தல்களை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்படி, எல்லை நிர்ணயம் முடிந்த வடக்குக் கிழக்கு மாகாணத்தில் முதலாவதாக உள்ளூராட்சித் தேர்தலை நடாத்துவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அதற்கான முன்னாயத்தங்கள் நடைபெற்றுவருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினருக்கு செல்வாக்குக் குறைந்த மாவட்டங்களிலும், நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கூடிய மாவட்டங்களிலும் தேர்தலை நடாத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வகையில் வடக்குக் கிழக்கில் முதலாவதாக தேர்தல் நடைபெறவுள்ளது எனவும் உயர் மட்ட அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.

எல்லை நிர்ணயம் செய்தபின்னர் நாடுதழுவிய ரீதியில் தேர்தலை நடாத்துவதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், கூட்டு எதிரணியினர் எல்லை நிர்ணயம் முடிவடைந்த மாவட்டங்களில் தேர்தலை நடாத்தலாமென்ற யோசனையை முன்வைத்தபின்னர், அரசாங்கம் அதனைத் தனக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.