நாடளாவிய ரீதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மீகொட
மீகொட பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வட்டரெக்க பிரதேசத்தில் 7 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 35 வயதான சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏகொடஉயண
மொரட்டுவை – ஏகொடஉயண பொலிஸ் பிரிவில் முகத்துவாரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் 5 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 14, 500 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அநுராதபுரம்
அநுராதபுரம் பகுதியில் 6 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 30 வயதான சந்தேகநபரொருவர் அநுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸை
கல்கிஸை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இருவேறு சுற்றிவளைப்புக்களில் 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 37 வயதான சந்தேகநபரொருவரும் , அத்திட்டிய பிரதேசத்தில் 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 43 வயதான சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு
நீர்கொழும்பு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட எதுகல பிரதேசத்தில் 6 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 33 வயதான சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அங்குலானை
அங்குலானை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தேவாலயத்திற்கு அருகில் 5 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அங்குலானை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிஹிஜய செவன
கொலன்னாவ – மிஹிஜயசெவன பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ரந்தியஉயண பகுதியில் 6 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொழும்பு 15 ஐ சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

