கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

320 0

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் கட்டுநாயக்க எவெரிவத்தை சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.