ஆட்சியை தக்கவைக்க ராணுவத்திடம் கெஞ்சியவர் இம்ரான்கான் – மரியம் நவாஸ் குற்றச்சாட்டு

117 0

ஷபாஸ் ஷெரீப் ஆட்சியில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்காது எனக்கூறிய இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கம் செய்யப்பட்டார்.
அந்நாட்டு புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

இந்நிலையில், லாகூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகளுமான மரியம் நவாஸ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கடைசி நிமிடம் வரை போராடினார்.
பிரதமர் பதவியில் தொடர்வதற்காக ராணுவத்திடம் உதவி கேட்டு இம்ரான்கான் கெஞ்சினார். ஆனால் ராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தன்போது தன்னைக் காப்பாற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் ஆசிஃப் அலி ஜர்தாரியிடமும் இம்ரான்கான் கெஞ்சினார் என தெரிவித்தார்.