இன்று பாராளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக் குழுக் கூட்டம்

423 0

பாராளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக் குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் வியாழக்கிழமை (28) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பு திருத்தத்திற்கான யோசனை தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்ள சபாநாயகரினால் விசேட கட்சி தலைவர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு 21 ஆவது திருத்தம் தொடர்பிலான யோசனைகளை ஐக்கிய மக்கள் சக்தியினரும், அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 39 பேர் கொண்ட குழுவினரும் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தன்மை குறித்து நிதி மற்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி எதிர்வரும் 4ஆம் திகதி பாராளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.