மின்கட்டணத்தை அதிகரிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை என்றும் மின்சாரக் கட்டணம் 100 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என வெளியாகும் வதந்திகளில் உண்மையில்லை என்றும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்று (26) தெரிவித்தார்.
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்காக, இலங்கை மின்சார சபை இரண்டு தடவைகள் பிரேரணைகளை சமர்ப்பித்த போதும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரின் விருப்பத்திற்கேற்ப மின்கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றார்.
அது முறையான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பில் பொதுமக்கள் அச்சமோ சந்தேகமோ கொள்ள வேண்டாம் என்று மேலும் தெரிவித்தார்.

