#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: நான் அதிபராக இருந்தால் ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன் – டிரம்ப்

314 0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 61 நாளாகிறது. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

27.4.2022
03.30: நட்பற்ற நாடுகளில் எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என ரஷிய அதிபர் புதினின் கடந்த மாதம் 25ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
ரூபிள்களில் கட்டணம் செலுத்த மறுத்ததால் தங்கள் நாடுகளில் இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்தி வைத்துள்ளது என போலந்து மற்றும் பல்கேரியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
00.45: தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது ஜோ பைடனுக்கு பதிலாக தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடிக்கடி அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை விடுக்காத வண்ணம் செய்திருப்பேன் என தெரிவித்தார்.