3,600 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டை வந்தடைந்தது – லிட்ரோ நிறுவனம்

294 0

3,600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) கொண்ட கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் இன்று (26) காலை 8.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளை (27) முதல் ஆரம்பமாகும் என  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட 3,600 மெட்ரிக் தொன் கொண்ட மற்றொரு கப்பல் ஏப்ரல் 28 ஆம் திகதி வியாழக்கிழமை வரும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை வெள்ளிக்கிழமை முதல் நேற்று  வரை இடைநிறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.