சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

229 0

மட்டக்களப்பு, பொலன்னறுவை எல்லை கிராமாமன வடமுனை ஊத்துச்சேனை பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வீதியை புரனமைத்து தருமாறு கோரி மணல் ஏற்றிச் சென்ற உழுவு இயந்திரங்களை மறித்து பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்டமானது நேற்றுமுன்தினம்  (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தத்தால் இடம்பெயந்த மட்டு கிரான் பிரதேச செயலகப்பிரிவின் கீழும் ஓட்டுமாவடி பிரதேச சபையின் கீழ் உள்ள வடமுனை ஊத்துச்சேனை, வெலிகந்தை சந்தியில் இருந்து 10 கிலோமீற்றர் தூரம் கொண்டது.

இந் நிலையில் வெலிகந்தை சந்தியில் இருந்து மதுறு ஓயா பாலம் வரையில் சுமார் 2 கிலோமீற்றர் தூரம் கொண் இந்த வீதி வெலிகந்தை பிரதேச சபையின் கீழ் உள்ளது அதேவேளை மதுறு ஓயா பாலத்தில் இருந்து ஊத்துச்சேனைக்கான வீதி கிரான் பிரதேச செயலக்பிரிவுக்கும் ஓட்டுமாவடி பிரதேசசபைக்கும் கீழ் உள்ளது.

இவ்வாறான நிலையில் மதுறு ஓயா பாலத்தில் இருந்து ஊத்துச்சேனைக்கு சுமார் 4 கிலோமீற்றர் தூரத்துக்கு புதிதாக கொங்கீறீற் வீதி அமைக்கப்பட்டு கடந்த மாதம் பாவனைக்கு திறந்துவிடப்பட்டது.

இதனையடுத்து இந்த பகுதியிலுள்ள வடமுனை காட்டுபகுதி குளப்பகுதி மற்றம் மீரான்ரைமில் பகுதி போன்ற இடங்களில் இருந்து சட்டவிரோதமாக மணல்களை அகழ்ந்து நாளாந்தம் சுமார் 50 மேற்பட்ட உழவு இயந்திரங்களில் எடுத்துக் கொண்டு இந்த புதிதாக அமைக்கப்பட்ட கொங்கிறீற் வீதி ஊடாக பிரையாணிப்பதால் வீதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீதி உடைந்துவருகின்றது.

எனவே இந்த சட்டவிரோத மணல் அகழ்வை நிறத்துமாறும் இந்த வெலிகந்தையில் இருந்து ஊத்துச் சேனை வரைக்குமானபன வீதியை புரனமைத்து தருமாறும் சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்துமாறும் கோரி ஓட்டுமாவடி, வெலிகந்தை பிரதேச சபைகளிடமும் கோரிக்கை விடுத்து எதுவும் இடம்பெறாத நிலையிலவெலிகந்தை சந்தியில் வீதியை மறித்து போராட்டம் நடாத்தப்பட்டு பொலிஸார் வீதிகளை புனரமைத்துதருவதாகவும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்துவதாக வாக்குறுதியளித்தனர்.

இருந்தபோதும் இதுவரை வெலிகந்தை சந்தியில் இருந்து மதுறு ஓயா வரைக்கான வீதி புனரமைக்கப்படவில்லை இந்த வீதியால் கால் நடையாக கூட செல்லமுடியாது வீதி உள்ளதுடன், தொடர்ந்து மீரான்ரமில் மற்றும் வடமுனை குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில் சட்டவிரோமாக மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்க எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

எனவே இவ்வாறான செயற்பாட்டால் புதிதாக அமைக்கப்பட்ட சுமார் 4 கிலோமீற்றர் கொண்ட கொங்கிறீற் வீதி கூட பாதிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் எதுவும் நடக்கவில்லை.

அரசியல்வாதிகளும் பார்க்கின்றார்கள் இல்லை என்ற நிலையில் இன்று சட்டவிரோதமாக மணல்களை ஏற்றிவந்த சுமார் 16 உழவு இயந்திரங்களை வீதியால் செல்லவிடாது கிராமவாசிகள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று உழவு இயந்திரங்கள் மணலை ஏற்றிக் கொண்டு கொங்கிறீற் வீதியால் பிரயாணிக்க தடைவிதித்ததுடன் வீதிக்கு அருகாமையில் செல்லுமாறு தெரிவித்து வெலிகந்தை வீதியை புனரமைத்து தருவதாக வாக்குறுதியளிக்கப் பட்டதையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.