அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவால் தயாரிக்கப்பட்ட 21ஆவது திருத்தில் அரசியலமைப்பு பேரவையை மீண்டும் ஸ்தாபித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
20ஆவது திருத்தத்தில் 19 ஆவது திருத்தததில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை நீக்கப்பட்டு பாராளுமன்ற சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நீக்கி மீண்டும் அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு ஸ்தாபிக்கப்படும் பேரவையின் உறுப்பினர்களாக, ஜனாதிபதி பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், ஜனாதிபதியின் முன்மொழிவு பிரிதிநிதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரின் முன்மொழிவு பிரதிநிதிகள், இலங்கை தொழில்சார் நிறுவன நிபுணத்துவமானோரின் அமைப்பின் பிரதிநிதி, இலங்கை வர்த்தக சங்கத்தினரின் பிரதிநிதிரூபவ் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 21ஆவது திருத்தத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு உள்ளிட்ட 09 ஆணைக்குழுக்கள் முன்மொழியப்பட்டுள்ளதோடு அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்ட தேசிய பெறுகை ஆணைக்குழுரூபவ்தேசிய கணக்காய்வு ஆணைக்குழு ஆகிய ஆணைக்குழுக்களை மீண்டும் ஸ்தாபிக்குமாறு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளைரூபவ் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் நியமனம், நீக்கம் தொடர்பில் பிரதமரின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிடவும்,& ஒவ்வொரு நபரும் வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உரிமை உண்டு என்ற வாக்கியம் அடிப்படை உரிமைகள் பகுதிக்குள் இணைக்கப்பட்டுள்ளது.

