உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதத்துக்கு மேலாகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
25.4.2022
03.15: அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இன்று உக்ரைன் தலைநகர் கீவுக்கு வருகை தந்தனர். கீவ் வந்த அமெரிக்க தலைவர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
00.25: உக்ரைன், ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கி உள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நாளை மாஸ்கோ செல்கிறார். அங்கு அதிபர் புதின், வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

