2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தனை ஆராதனை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்றைய தினம் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
3ஆம் ஆண்டு நினைவாக நடைபெற்ற இவ்வாராதனை சியோன் தேவாலய தலைமை போதகர் ரொசான் மகேசன் தலைமையில் நடைபெற்றது.இப் பிரார்த்தனை ஆராதனையில் மட்டக்களப்பில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நண்பர்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டிருந்தன

