பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவருக்கும் முற்கூட்டியே இராஜாங்க அமைச்சுப் பதவிகள் கொடுக்கப்படாமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை கொடுத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் கொடுக்கப்பட்ட பின்னரே இவர்கள் இருவருக்கும் இந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏன் அவர்கள் முற்கூட்டியே தயாரித்த பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருக்கவில்லையா? அல்லது நீக்கப்பட்டதா? அல்லது வேறு எவரேனும் அழுத்தம் கொடுத்ததன் பேரில் இந்த பதவிகள் கொடுக்கப்பட்டனவா என்ற சந்தேகங்கள் இருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்

