கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் 322 ஊழியர்கள் இன்று(20) காலை உணவு ஒவ்வாமை காரணமாக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

