ஸ்வீடன், பின்லாந்தை நேட்டோவில் சேர்த்தால் பால்டிக் பகுதியில் அணு ஆயுதங்களை நிறுத்துவோம் – ரஷ்யா எச்சரிக்கை

331 0

பின்லாந்தும் ஸ்வீடனும் அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியில் (நேட்டோவில்) சேருவது குறித்து யோசித்து வருகின்றன. இது தொடர்பாக அடுத்த சில வாரங்களில் பின்லாந்து முடிவு எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் சன்னா மரின் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்நிலையில், 2008 முதல் 2012 வரை ரஷ்ய அதிபராக இருந்தவரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான திமித்ரி மெத்வெதேவ் நேற்று கூறும்போது, “ஸ்வீடன் மற்றும் பின்லாந்தை நேட்டோவில் இணைத்தால் ரஷ்யா தனது ராணுவ சமநிலையை மீட்டெடுக்க பால்டிக்கடல் பகுதியில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படைகளை பலப்படுத்த வேண்டிருக்கும். அணு ஆயுதம் இல்லாத பால்டிக் பற்றி இனி பேச முடியாது. இன்று வரை ரஷ்யா அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால் அத்தகைய நடவடிக்கைக்கு நாங்கள் தள்ளப்பட்டால் அதற்கு காரணம் நாங்கள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.