யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் குறித்த வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
இச்சம்பவமானது நேற்று(05) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,
தீ விபத்தின் காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் மின் பிறப்பாக்கி இயந்திரம் என்பன முழுமையாக எரிந்து சேதமாகியுள்ளன.
இதனையடுத்து தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.




