நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த பாராளுமன்ற விவாதம் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இன்று மற்றும் நாளை பாராளுமன்றில் விவாதம் ஒன்றை மேற்கொண்டு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10.17 AM…..
நாட்டின் டொலர் பிரச்சினையை தீர்ப்பதற்காக எம்மிடம் தீர்வு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பெண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்நாட்டு டொலர் கொள்ளையினை அந்தந்த நாடுகளில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் டொலர் பிரச்சினைக்கு உடனடி தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றை இந்நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தால் நாட்டில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டார்.

