தங்காலை, கால்டன் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைதானோருக்கு பிணை

221 0

பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து நாடளாவிய ரீதியில் மக்கள் எழுச்சிப் பேராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்றையதினம் தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கால்டன் இல்லத்திற்கு அருகில் பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட 12 பேருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.